சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறியளவில் மழை பெய்யக் கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவக் கூடும்.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீட்டர் வரையான அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

மத்திய சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“GAJA” என்ற சூறாவளி வலுவடைந்து இலங்கைக்கு வடகிழக்காக காங்கேசன்துறையிலிருந்து 700 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 13.2N, கிழக்கு நெடுங்கோடு 85.6E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பாரிய சூறாவளியாக வலுவடைந்து மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து பாரிய சூறாவளியாக விருத்தியடையும் சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றது.

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் 7500 பேர்

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்