சூடான செய்திகள் 1

பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு

(UTVNEWS | COLOMBO) – உயர்தரப் பரீட்சைக்கு பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளை பரீட்சை எழுத அனுமதி வழங்காமல் இடையூறு செய்யப்பட்டமை தொடர்பில், பரீட்சை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று ஆரம்பமான உயர்தரப் பரீட்சைக்கு பர்தா அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளுக்கு
பூகொடை குமாரிமுல்ல மாணவிகள், கிரிந்திவெல மத்திய கல்லூரி மாணவிகள் பர்தாக்களை அகற்றுமாறு பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி கடுமையாக உத்தரவிட்டதால் அந்த மாணவிகள் பர்தா இன்றி பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

பின்னர் பெற்றோரினால் அவர்களுக்கு முக்காடுகள் வழங்கப்பட்டுள்ளது.

இது போன்று வேறு சில பிரதேசங்களிலும் பர்தா அணிந்து பரீட்சை எழுத இடையூறு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருவதாகவும். சில இனவாத போக்குள்ளவர்கள் வேண்டுமென்றே ஒவ்வொரு வருடமும் பரீட்சைகளின் போது குழப்பம் ஏற்படுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related posts

தொல்பொருள் பெறுமதி கொண்ட இடத்திற்கு சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக்கப்படும்

சுகாதார சிற்றூழியர்கள் பணிப்புறக்கணிப்பு

நாட்டின் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை