உலகம்

பருவநிலை மாநாட்டில் பிரித்தானிய மகாராணி கலந்துகொள்ளவில்லை

(UTV | பிரித்தானியா) – பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், மேலும் 02 வாரங்கள் ஓய்வில் இருப்பாரென பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

ஆகவே, மகாராணி பருவநிலை மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அரண்மனை அறிவித்துள்ளது.

95 வயதான பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத், கடந்த வாரம் வழக்கமான சோதனைகளுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், வைத்தியர்களின் பரிந்துரைக்கு அமைவாக அவர் மேலும் 02 வாரங்களுக்கு ஓய்வில் இருக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரான்ஸில் புதுவகை கொரோனா தொற்றுடன் முதலாவது நபர் அடையாளம்

பனிச்சரிவில் சிக்கி 38 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

editor