(UTV | கொழும்பு) – பருப்பு மற்றும் டின் மீன் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 17ஆம் திகதி, ஜனாதிபதியினால் சில பொருட்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய, ஒரு கிலோகிராம் பருப்புக்கான விலை 65 ரூபாய் எனவும், 425 கிராம் டின் மீனின் விலை 100 ரூபாய் எனவும் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டது.
மார்ச் 18 முதல் நடைமுறையில் வருவதாக அறிவிக்கப்பட்ட குறித்த அறிவிப்பு தற்போது நீக்கப்படுவதாக, நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது