வணிகம்

பருப்பு, சீனி ஆகியவையின் விலையில் உயர்வு

(UTV | கொழும்பு) –   உள்ளூர் சந்தையில் சிவப்பு பருப்பு மற்றும் சீனி ஆகியவையின் கிலோ ஒன்றிற்கான விலை ஒரு வாரத்தில் ரூ.10 ஆல் அதிகரித்துள்ளதாக மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை ரூ.155 ஆக இருந்தது மேலும் 07 ஆம் திகதி மேலும் ரூ.10 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் மொத்த விலை ரூ. 170 ஆக காணப்படுவதோடு, சில்லறை விற்பனையாளர்கள் ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலை ரூ. 220 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் ஒரு கிலோ சீனியின் விலை ரூ.125 ஆகவும், ஒரு கிலோ சீனியின் மொத்த விலை ரூ. 142 ஆக அதிகரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. நிலவும் சூழ்நிலை காரணமாக ஒரு கிலோ சீனியின் சில்லறை விலை ரூ.155 ஆக விற்பனை செய்ய வேடியதாய் உள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts

கம்பஹா, கேகாலை மாவட்டங்களில் துரியான் செய்கை

30 மில்லியனுக்கும் அதிகமான தொகை வருமானம்

புறக்கோட்டையில் சில உணவு பொருட்களின் விலைகள் குறைவு