வகைப்படுத்தப்படாத

பரீட்சை ரத்து : அரசாங்க தகவல் திணைக்களம்

(UDHAYAM, COLOMBO) – 2017ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தற்போதைய அசாதாரண காலநிலையின் காரணமாக 2017ம் ஆண்டு மே மாதம் 28ம் திகதி இடம்பெறவிருந்த அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையின் 111 தரத்திற்கு சேர்த்துக் கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. 93,952 பரீட்சார்த்திகள் குறித்த பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

இப்பரீட்சையானது மீண்டும் இடம்பெறும் தினம் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் தெரிவிக்கப்பட உள்ளதுடன், தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புதிய பரீட்சை அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் காலங்களில் அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பரீட்சை திணைக்களத்தின் நிர்வன மற்றும் வெளிநாட்டு பரீட்சை கிளையினை தொடர்பு கொள்ள முடியும்.

தொலைப்பேசி இலக்கங்கள் : 011 2785230 / 011 2177075

அவசர தொடர்புகளுக்கு : 1911  (24 மணித்தியாலமும்) /  011 2785212

 

எல்.ஜீ. திலகரத்ன

பிரிவுத்தலைவர் – பிரச்சாரப் பிரிவு

அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயககத்துக்குப் பதிலாக

 

Related posts

பப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் யூசுப் ரசா வெளிநாடு செல்லத் தடை

இந்தோனேசியாவில் தொடர் நிலச்சரிவு- 15 பேர் உயிரிழப்பு