உள்நாடு

பரீட்சை முறைமைகளில் மாற்றத்தை ஏற்படுத்த யோசனை

(UTV | கொழும்பு) – கல்வி பொதுதராதர சாதாரண தரப்பரீட்சையை நிறைவு செய்து மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் காலம் மற்றும் உயர்தரப் பரீட்சையை நிறைவு செய்து பல்கலைக்கழகம் செல்வதற்கான காலம் என்பவற்றை குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர, பரீட்சை கால அளவை மாற்றுவதோடு பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி தொடர்பில் விளக்கம்

தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களின் விலை தொடர்பில் வெளியான தகவல் !

சம்பிக்கவின் வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கம்