அரசியல்உள்நாடு

பரீட்சை நேரத்தில் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம்.

எதிர்வரும் 15 ஆம் திகதி தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

தரம் 5ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், காலை 9.30 மணி தொடக்கம் மதியம் 12.15 மணிவரை நடைபெறவுள்ளது.

அதனால், பரீட்சை நேரத்தில் பரீட்சை நிலையங்களுக்கு அருகில் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தேர்தல் பேரணிகளை நடத்த வேண்டாம் எனவும், ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் அனைத்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது

Related posts

அரிசி தட்டுப்பாடு இருக்காது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 754 ஆக அதிகரிப்பு

துமிந்த சில்வாவிற்கு பொதுமன்னிப்பு வழங்க முயற்சி [VIDEO]