சூடான செய்திகள் 1

பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரே‌ஷ்ட அதிகாரிகள் 5 பேர், விசேட வைத்திய நிபுணர்கள் 5 பேர் மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 1, 2 மற்றும் 3 ஐ சேர்ந்த மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் இந்தக் குழு விசேட ஆய்வினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றவிதத்தில் பரீட்சை நடைமுறையை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் விசேட உரை

இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பாக முன்னால் ஜனாதிபதியுடன் நாளை பேச்சுவார்த்தை