சூடான செய்திகள் 1

பரீட்சையில் சித்தியடையாததால் தற்கொலை செய்துகொண்ட அனுசியா

(UTV|MULLAITIVU)-நேற்று வெளியான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை என கிணற்றில் குதித்து ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் இறுதி யுத்தத்தில் தந்தையை இழந்து தாயை பிரிந்து அம்மம்மாவுடன் வசித்து வந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவி எதிர்பார்ப்புடன் கல்வி கற்று பரீட்சை எழுதிய போதும் நேற்று வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் 4 பாடங்களில் மாத்திரமே சித்தியடைந்ததை தொடர்ந்து இன்று (29) காலை கிணற்றில் குதித்து உயிரை மாய்த்துள்ளார்.

முல்லைத்தீவு வள்ளிபுனம் கனிஸ்ட வித்தியாலயத்தில் கல்வி கற்று பரீட்சை எழுதிய கைவேலி மருதமடு குழ வீதியை சேர்ந்த சாந்தலிங்கம் அனுசியா என்ற மாணவியே இவ்வாறு தனது உயிரை மாய்த்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

இன்று பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்