வகைப்படுத்தப்படாத

பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையால் யாழ். மாணவன் எடுத்த விபரீத முடிவு

(UTV|JAFFNA)-உயர் தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக மனமுடைந்த யாழ்ப்பாணம், வடமராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் விசமருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், குறித்த மாணவன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

நண்பர்களை விட அதிக பெறுபேறு கிடைக்காமையின் காரணமாக அவர் மிகுந்த மனவருத்தத்துடன் இருந்ததாகவும், மாலை நேரம் குறித்த மாணவனின் அறையில் அழுகுரல் கேட்டதையடுத்து அறைக்கு சென்று பார்த்த போது மாணவன் வாந்தி எடுத்துக் கொண்டிருந்ததால் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாகவும் மாணவனின் தந்தை பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் அவர் பருகியுள்ள விஷ மருந்து பாரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதல்ல என்பதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வடமராச்சி பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UAE offers 100% foreign ownership in 122 economic activities

இந்திய கடற்றொழிலாளர்கள் 4 பேர் கைது!!

ராணுவ ஆயுத கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் 15 ஆயிரம் பேர் வெளியேற்றம்