(UTV | கொழும்பு) – பரீட்சைகள் திணைக்களத்தை தனியார் மயப்படுத்துவதற்கான எவ்வித திட்டங்களும் இல்லையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்,
சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ள கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய தினம் முதல் பரீட்சைகள் திணைக்களத்தை தனியார் மயப்படுத்தவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வௌியான செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லையனெ பரீட்சைகள் ஆணையாளர் அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பரீட்சை புள்ளிகளை கணினி மயப்படுத்தும் செயற்பாட்டில் எந்தவொரு தனியார் தரப்போ அல்லது தனியார் நிறுவனமோ தொடர்புபடவில்லையென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்,
கணினி மயப்படுத்தும் அனைத்து செயற்பாடுகளுடனும் பரீட்சைகள் திணைக்கள ஊழியர்கள் மாத்திரமே தொடர்புபட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார்.