உள்நாடு

பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் இல்லை

(UTV | கொழும்பு) – இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார்.

கால அட்டவணைகளுக்கு அமைய பாடத்திட்டங்களில் பூர்த்தி செய்யப்பட்ட பகுதிகளுக்கு அமைய பரீட்சைகள் நடத்தப்படும். அத்துடன் சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமையவே பாடசாலைகளும் மீளத் திறக்கப்பட உள்ளதாக என்.எச்.எம். சித்ரானந்த கூறினார்.

Related posts

‘Beaver Blood Moon’ – இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று

மருத்துவபீட பரீட்சை நடவடிக்கைகளுக்கு பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை

editor