உள்நாடு

பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத்தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்பதை பரீட்சிக்கும் முயற்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஒத்திகை செயற்பாடு ஒன்றில் ஈடுபட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் நாட்களில் இதற்கென தெரிவு செய்யப்பட்ட 200 வாக்காளர்களை கொண்ட பரிட்சார்த்த தேர்தல் ஒன்றினை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது வாக்காளர்கள் செயற்படும் விதம், அவர்களின் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் அதற்கு அமைவான விடயங்களை கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர்கள் கட்டாயம் முககவசம் பயன்படுத்த வேண்டும் என்பதினால், எவ்வாறு வாக்காளர்களை உறுதிப்படுத்துவது என்பது தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

இன்றைய நாணயமாற்று விகிதம்

ஸ்பா நடத்துவதில் புதிய சட்டம்

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது