விளையாட்டு

பயிற்சிக்கு திரும்பிய ரோஹித்

(UTV |  சென்னை) – இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. போட்டிக்கு முன்பாக பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது.

அப்போது ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொண்டார்.

அதனால் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் இந்திய அணி 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ரோகித் சர்மாவுக்கு மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இல்லை என முடிவானது. இதனையடுத்து ரோகித் சர்மா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதனை பிசிசிஐ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடரில் இங்கிலாந்தில் விளையாடுவதால் அவர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

Related posts

குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை

ரான்ஸ்ஃபோர்ட் இற்கு மீண்டும் சர்வதேச போட்டிகளில் பந்து வீச அனுமதி

ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி மீண்டும் ‘சாம்பியன்’