உலகம்

பயணக் கட்டுப்பாடுகள் இன்று முதல் வலுக்கிறது

(UTV |  பிரித்தானியா)- தமது நாட்டுக்கான பயணக் கட்டுப்பாடுகளை இன்று முதல் கடுமையாக்கவுள்ளதாக, பிரித்தானியா அறிவித்துள்ளது.

இதன்படி, பிரித்தானியாவுக்கு வருகை தரும் எந்தவொரு பயணியும், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கு வருகை தருவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனையின் மூலம் இவ்வாறு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த PCR பரிசோதனையை மேற்கொள்ளாது பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்களுக்கு 500 ஸ்டேர்லிங் பவுண் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

மேலும், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர், பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படும் பயணிகள் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் பிரித்தானியா அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த புதிய பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் பெப்ரவரி 15 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என பிரித்தானியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் மேலும் 70 பேருக்கு கொவிட்

தென்கொரியாவில் உரைநிகழ்த்தவுள்ள அனுர

பிலிப்பைன்ஸ் புயல் : 19 பேர் பலி