உள்நாடு

பயணக்கட்டுப்பாடு தளர்வும் பின்பற்றவேண்டியவையும்

(UTV | கொழும்பு) –  சுகாதார கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குவிதிகளின் அடிப்படையிலேயே நாளை (21) பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாளை(21) அதிகாலை 4 மணியுடன் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது. எனினும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில் பயணக்கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படும்.

அதேவேளை மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும்.

எனவே பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் இயன்றவரை சுகாதார வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும்.

அரச மற்றும் தனியார் அலுவலகங்கள் மட்டுப்படுத்தப்பட்ட பணியாளர்களுடன் இயங்க வேண்டும்.

ஆசன எண்ணிக்கைக்கு அமைவான பயணிகளுடன் பொதுப்போக்குவரத்து சேவைகள் இடம்பெற வேண்டும்.

பொது இடங்களில் ஒன்றுகூடல் மற்றும் விருந்துபசாரங்களை நடத்துதல் என்பன முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன.

இதேவேளை வர்த்தக நிலையங்கள், சிறப்பு அங்காடிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை நிலையங்கள் என்பனவற்றில் சுகாதார நடைமுறைகள் உரியவாறு பின்றபற்றப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related posts

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு HRC அழைப்பு

தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் ஒத்துழைப்பு

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு