உள்நாடு

பயங்கரவாத தடை சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்திற்கு முரணானவை : வழக்கிலிருந்து சிவாஜி முற்றாக விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குறித்த வழக்கில் பயங்கரவாத தடைச் சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்துக்கு முரணானவை என தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து நேற்று வியாழக்கிழமை முற்றாக விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் தியாகி திலீபன் நினைவு கூருவதாக தீ சட்டிப் பந்தம் ஏந்தி பதாகைகள் உட்பட தடை செய்யப்பட்ட இயக்கத்தை நினைகூர்ந்தமை பயங்கரவாத தடை சட்டம் ஒழுங்கு விதிகளுக்கு எதிரான பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்தமை தொடர்பில் பொலிசாரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கானது இம்மாதம் ஐந்தாம் திகதி விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்ட போது சிவாஜிலிங்கம் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி கே எஸ் இரத்தினவேல் சமர்ப்பித்தால் குறித்த வழக்கு எவ்வித அடிப்படை ஆதாரமற்ற வழக்காக காணப்படுவதால் பெலிஸாரின் குற்ற பத்திரத்திற்கு எதிராக மந்துரை அல்லது பூர்வாங்க ஆட்சேபணையை எழுப்ப முடியாது என மான்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

மேலும் குற்றம் நடைபெற்றதாக பொலிசாரால் கூறப்படும் பிரதேச நியாயாதிக்க எல்லைக்குள் இருக்கும் வடமாகாணத்தில் உள்ள யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இலங்கை அரசியல் யாப்பின் பிரிவு 154 ரி (1) சி எந்த ஒரு குற்றம் நடைபெற்ற பிரதேசத்தின் நியாயாதிக்கம் உடைய மாகாண நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியல் அமப்பு கூறுகிறம் நிலையில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தமை இலங்கை அரசியல் அமைப்பை மீறுவதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

அந்த அடிப்படையில் நியாயாதிக்க நீதிமன்றமாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் விசாரணை செய்ய வேண்டும் சட்டமா அதிபர் வழக்கை கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தமை அரசியல் அமைப்புக்கு முரணானகக் காணப்படுவதுடன் இலங்கை அரசியல் அமைப்பை மீறி எந்த ஒரு சட்டமும் அமையாது.

பயங்கரவாத தடை சட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் பிரிவு 27 பாதுகாப்பு அமைச்சர் சட்டத்தை அமல்படுத்த எந்த ஒரு ஒழுங்கு விதிகளையும் கொண்டு வரலாம் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ச பெயரில் ஒழுங்கு விதிகள் கொண்டுவரப்பட்டது.

குறித்த ஒழுங்கு விதிகள் குறிப்பிடப்பட்ட நிலையில் ஒழுங்கு விதி 3 இல் வழக்கு தாக்கல் செய்யப்படும் நிலையில் பிரிவு 4 ல் குறிப்பிடப்பட்ட ஒழுங்கு விதிகளுக்கு அமைய மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் குற்றத்துக்கான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யலாம் என ஒழுங்கு விதி கூறுகிறது.

குறித்த ஒழுங்கு விதி இலங்கை அரசியல் அமைப்புக்கு முரணாகக் காணப்படுவதுடன் ஒழுங்கு விதியில் மேல் நீதிமன்றம் என்ற வாசகமே மட்டும் காணப்படுகிறதே தவிர கொழும்பு மேல் நீதிமன்றம் என்ற வாசகம் காணப்படவில்லை என சிவாஜிலிங்கம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இரத்தினவேல் மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பாதுகாப்பு அமைச்சருக்கான பிரிவு ( 27) ஒழுங்கு விதி சட்ட வலிதாகக் காணப்படும் நிலையில் இந்த சட்ட வலிதற்ற ஒழுங்கு விதிகளின் பிரகாரம் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை மனுதாரர் மன்றுரைக்கவோ அல்லது மறுமொழி கூறுவதற்கோ அவசியம் கிடையாது.

அது மட்டும் அல்லாது
33 வருடங்களுக்கு முன்னர் மரணித்த ஒரு அஹிம்சாவாதி திலீபனை நினைவு கூறுவது எந்த விதத்திலும் பயங்கரவாதத்தை மீள உருவாக்குவதாகவோ அல்லது சட்டத்தை மீறிய செயற்பாடுகளாகவோ அமையாது

ஆகவே சட்டத்துக்கு முரணான வலிதற்ற குற்ற பத்திரம் மூலம் தொடுக்கப்பட்ட வழக்கை செல்லுபடி அற்றது என தெரிவித்து குற்றம் சாட்டப்பட்ட எம் கே சிவாஜிலிங்கத்தை குறித்த வழக்கில் இருந்து முற்றாக விடுதலை செய்யுமாறு சமர்ப்பணம் முன் வைத்தார்.

இந்நிலையில் நேற்று தினம் வியாழக்கிழமை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் குறைத்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த வழக்கானது அரசியல் அமைப்பின் ஏற்பாடுகளை மீறுவதாகவும்.

குறித்த வழக்கானது குற்றம் நடந்த பிரதேசத்தின் நியாயாதிக்கத்திற்கு உற்பட்ட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என தனது தீர்ப்பில் கூறியதுடன் குறித்த வழக்கிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட நபரான எம்.கே சிவாஜிலிங்கத்தை முற்றாக விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

குறித்த வழக்கில் சிரேஷ்ட சட்டத்தரணி கே எஸ் இரத்தினவேல் முன்னிலையாகியதுடன் சட்டத்தரணிகளான சுரங்க பண்டார மற்றும் சட்டத்தரணி லக்ஷன் அபயவர்த்தன ஆகியோர் முன்னிலையாக இருந்தனர்.

Related posts

ரவி உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை

சங்கு சின்னத்துக்கு ஆதரவளிக்க தீர்மானம் – செல்வம் அடைக்கலநாதன்

editor

களு கங்கையின் நீர்மட்டம் உயர்வு