உள்நாடுசூடான செய்திகள் 1

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தில் திருத்தம் : அமைச்சரவை அங்கீகாரம்

(UTV | கொழும்பு) –

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள திருத்தங்களை இணைத்து உரிய சட்டத்தை திருத்தியமைக்க வரைஞருக்கு அறிவுறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் நேற்று (28) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

27-02-2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில்1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்கி, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட மேற்படி சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்கள் தொடர்பில் ஆர்வமுள்ள தரப்பினர் சமர்ப்பித்த கருத்துக்களை கருத்திற்கொண்டு குறித்த சட்டமூலத்தில் தேவையான திருத்தங்களை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையர் சென்னையில் மாயம்

ISநபர்களை வழிநடாத்திய புஷ்பராஜ் கைது!

நாடு முழுமையாக சீரழிந்துள்ளது-முன்னாள் ஜனாதிபதி