உலகம்

பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை பாகிஸ்தான் ஊக்குவிக்கின்றது

(UTV | அமெரிக்கா) – இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளின் செயற்பாடுகளை பாகிஸ்தான் ஊக்கிவிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பயங்கரவாதிகளின் பாதுகாப்பான புகலிடமாக பாகிஸ்தான் தொடர்ந்து இருந்து வருவதாகவும், இங்கிருந்து கொண்டு இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதிகளை செயல்பட அனுமதிக்கிறது எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தியாவையும், ஆப்கானிஸ்தானையும் தாக்கும் பயங்கரவாத அமைப்புக்களை தனது மண்ணில் தொடர்ந்து செயல்பட பாகிஸ்தான் அனுமதித்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களாக லஸ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது ஆகியவையும், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாத இயக்கங்களாக ஆப்கன் தலீபான், ஹக்கானி குழு ஆகியவையும் பாகிஸ்தானிலேயே இயங்கி வருவதாக அமெரிக்கா தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

இந்தியாவின் 15வது ஜனாதிபதியாக பதவியேற்றார் திரவுபதி முர்மு

அமெரிக்க ராணுவ விமான விபத்தில் 2 வீரர்கள் பலி

தனுஷ்க குணதிலக மீதான பாலியல் குற்றசாட்டுகள் 4ல் 3 வாபஸ்…