உள்நாடு

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு மைத்திரி எதிர்ப்பு

(UTV | கொழும்பு) –  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

போராட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்வது நல்லதல்ல என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன உள்ளூர் பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டில் எந்தவொரு யுத்த சூழ்நிலையும் இல்லாத நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே பயங்கரவாதத் தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை கொள்கை ரீதியாக மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதில் தாம் உடன்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அந்தச் சட்டத்தை இரத்து செய்து, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதலுக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் வெடிகுண்டுத் தாக்குதலுக்கு உதவிய உண்மையான பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்களுக்கு புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடனான யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அந்த சட்டத்தை இல்லாதொழித்து நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் அமுல்படுத்துவதற்கான மற்றுமொரு சட்டத்தை தயாரிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

வரைவு தயாரிக்கப்பட்டதாகவும் ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அதனை ஏற்க நேரமில்லை என்றும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் பாரிய சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், ஜனாதிபதி மாளிகையில் பொருட்களை திருடியவர்கள், பொருட்களையும் சொத்துக்களையும் அழித்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைத்ததாக சந்தேகிக்கப்படுபவர்கள் உள்ளிட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .வழக்கு தொடரலாம் என்றும் கூறினார்.

அதற்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

 

  • ஆர்.ரிஷ்மா 

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 39 பேர் கைது

Just Now; தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஶ்ரீதரன் தெரிவு !

வானத்தை தொடும் அளவு உயரும் மின் கட்டணம்!