உள்நாடு

பம்பலப்பிட்டியில் வீடொன்றில் அத்து மீறிய கொள்ளை…

(UTV | கொழும்பு) –   கொழும்பு, பம்பலப்பிட்டி, ஸ்கெல்டன் வீதிப் பகுதியில் வீடொன்றை உடைத்து பல லட்சம் பெறுமதியான சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.

இதற்கமைய சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர்கள் மேற்கொண்ட முறைப்பாட்டையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்படி குறித்த வீட்டில் இருந்து பிஸ்டல் ரக துப்பாக்கி மற்றும் 12 தோட்டாக்கள் கொண்ட மகசீன், பத்து இலட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட பெறுமதியான தங்கம், ஒரு கோடியே ஒரு இலட்சம் ரூபா, மற்றும் ஆறாயிரம் அமெரிக்க டொலர்கள் என்பன திருடப்பட்டுள்ளன.

இதேவேளை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமாய் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க புதிய திட்டங்கள்!

“ஹுஸ்ம தென துரு” தேசிய மர நடுகை திட்டம்

மேலும் 79 பேர் குணமடைந்தனர்