விளையாட்டு

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் நீல் வக்னர் முன்னேற்றம்

(UTV|INDIA) – சர்வதேச கிரிக்கெட் சபையின் டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு நியூசிலாந்தின் வேகப் பந்துவீச்சாளர் நீல் வக்னர் முன்னேறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் ஏழு விக்கெட்டுகளைக் கைப்பற்றியதைத் தொடர்ந்தே, அண்மையில் வெளியிடப்பட்ட தரவரிசையில் மூன்றாமிடத்திலிருந்து ஓரிடம் முன்னேறி இரண்டாமிடத்தை நீல் வக்னர் அடைந்துள்ளார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கெதிரான முதலாவது டெஸ்டில் நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய தென்னாபிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் வேர்ணன் பிலாந்தர், எட்டாமிடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி ஐந்தாமிடத்தை அடைந்துள்ளார்.

முதல் 10 பந்துவீச்சாளர்களின் தரவரிசை பின்வருமாறு,

பற் கமின்ஸ், 2. நீல் வக்னர், 3. ககிஸோ றபாடா, 4. ஜேஸன் ஹோல்டர், 5. வேர்ணன் பிலாந்தர், 6. ஜஸ்பிரிட் பும்ரா, 7. மிற்செல் ஸ்டார்க், 8. ஜொஷ் ஹேசில்வூட், 9. இரவிச்சந்திரன் அஷ்வின், 10. மொஹமட் ஷமி.

Related posts

இலங்கை அணி சுரங்க லக்மாலிடம்…

இறுதி ஓவரில் தப்பு நடந்து விட்டது..-ஒப்புக் கொண்ட நடுவர் தர்மசேன

உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் காலிறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை ஆரம்பம்