கேளிக்கை

பத்மவிருது பெறும் சினிமா பிரபலங்கள்

(UTV|INDIA)-ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அதேபோல் நடிகர் பிரபுதேவா, மனோஜ் பாஜ்பய், மறைந்த நடிகர் காதர்கான் உள்ளிட்டோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் ஷங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, நார்த்தகி நடராஜ் உள்ளிட்டோருக்கு பத்மஸ்ரீ விருது பெறுகின்றனர்.
பத்ம விருதுகள் வென்ற பிரபலங்களுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Related posts

வைரலாகும் அமலா பாலின் புகைப்படம்

எஸ்.பி. தொற்றில் இருந்து மீண்டார்

நவம்பரில் நயன்தாராவுக்கு திருமணம்?