உள்நாடு

பதிவு செய்யப்படாத சானிடைசர் விற்பனைக்கு தடை

(UTV | கொழும்பு) –  தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசர்களை தயாரிக்கவோ அல்லது பயன்பாட்டுக்கு விநியோகிக்கவோ முடியுமென அறிவிக்கபட்டுள்ளது.

இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதிமுதல் நடைமுறைக்கு வரும் வகையில், அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும், உற்பத்தி செய்யப்படும் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள், தமது சானிடைசர் உற்பத்திகளை பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்க்பட்டுள்ளது

 

Related posts

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நத்தார் தின வாழ்த்துச் செய்திகள்

ஆஸிக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 51 பேர் கைது

தேசிய சபை மீதான விவாதம் இன்று