கிசு கிசு

பதில் ஜனாதிபதியாக ரணில்…

(UTV | கொழும்பு) – ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்வதற்கான பிரசாரத்தை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கட்சியின் தலைவர்கள் முன்னெடுத்து வருவதாக இணையச் சேவை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எவ்வாறாக இருப்பினும், பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருப்பதாக மிகவும் நெருங்கிய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.

பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற அணிகளில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், டலஸ் அழகப்பெருமவை ஜனாதிபதியாக்க ஒரு தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும், டலஸ் அழகப்பெருமவின் தோல்வியைக் கொண்டாடும் வேலைத்திட்டம் நெலும்மாவத்தை அடிப்படையாக கொண்டு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலமான ஒருவர் முயற்சிப்பதாகவும், அதற்காக வாக்குகளைப் பயன்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 50 கோடி ரூபாவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related posts

‘மெனிக்கே’ பாடலில் மெய்மறந்த ஜனாதிபதி

பிரதமர் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதியிடம் கையளித்தார்

அலங்கார விளக்கான ‘கொரோனா’ தடுப்பூசி குப்பிகள்