உள்நாடு

பதில் அமைச்சர்கள் ஐவர் நியமனம்!

(UTV | கொழும்பு) –

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று அதிகாலை ஜேர்மனிக்கு சென்றுள்ள நிலையில், அவர் அந்நாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களின் பொறுப்பு பதில் அமைச்சர்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பதில் பாதுகாப்பு அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பதில் நிதி அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெள்ளியன்றுக்குள் நாடு முடக்கப்படாவிடின் தொழிற்சங்கங்கள் அதனை செய்யும்

வாதுவை மற்றும் களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு

கொவிட் தொற்றாளர்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து