உள்நாடு

பதவி விலகுகிறார் மஹிந்த..

(UTV | கொழும்பு) – அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, நாட்டை முன்னெடுத்து செல்ல ஜனாதிபதியிடம் தனது இராஜினாமா கடிதத்தை கையளித்தார் பிரதமர் மஹிந்த, இருப்பினும் ஜனாதிபதி அதை ஏற்கவில்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி அமைச்சரவை கலைக்கப்பட்டு புதிய பிரதமரின் கீழ் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வேண்டும்.

பிரதமரின் இராஜினாமாவின் பின்னர், பெரும்பான்மை பலமுள்ள பாராளுமன்ற உறுப்பினரை அரசாங்கத்தை அமைக்க அழைக்கவோ அல்லது மீண்டும் தேர்தலை நடத்தவோ ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

UPDATE :

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்ததையடுத்து, அவருடன் பணியாற்றிய சில அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலக வேண்டாம் என அழுத்தம் கொடுத்துள்ளனர்.

பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ மற்றும் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோரின் ராஜபக்ஷ குடும்ப உறுப்பினர்கள் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொலை செய்யப்பட்ட வர்த்தகர் – சந்தேக நபர் பர பரப்பான வாக்குமூலம்.

ஓய்வூதிய வயது தொடர்பில் தெளிவுபடுத்துதல்

ரிஷாத் விரும்பினால் சபைக்கு வரலாம்