கிசு கிசு

பதவி விலகத் தயாராகும் ‘மஹிந்த’

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அடுத்த மூன்று மாதங்களுக்குள் பதவி விலகத் தீர்மானித்திருப்பதாக அவருக்கு நெருக்கமான தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அநுராதபுரத்தில் ருவன்வெளிசாயவில் பௌத்த பெருமான விஜயம் செய்த எட்டு தளங்கள் இருக்கின்றன. இதற்கு மேலதிகமாக ஒன்பதாவது தளத்தை (விகாரையை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திறந்து வைக்கவுள்ளார்.

மேலும், இது பௌத்த மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. எனினும், இது பௌத்த பெருமானின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ருவன்வெளியாவில் சேர்க்கப்படாது என்ற கருத்தும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் எழுத்துள்ளது.

இந்நிலையில், குறித்த விகாரையை திறந்துவைத்த பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகி, அரசியலில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மஹிந்தவின் உடல் நிலை மோசமாகி வருவதால் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அடுத்த பிரதமர் பதவிக்கு பசில் ராஜபக்சவை நியமிப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக பிரதமருக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

இன்று(07) மின்தூக்கியில் சிக்கிய 12 பாராளுமன்ற உறுப்பினர்கள்

பொய் செய்திகளை கண்டறியும் வசதி அறிமுகம்

29 நாட்களுக்கு பின்னர் பிரேதத்தில் கொரோனா POSITIVE