உலகம்

பதவி நீக்கம் செய்யப்பட்ட சீன பாதுகாப்பு அமைச்சர்!

(UTV | கொழும்பு) –

கடந்த 2 மாதங்களாக மர்மமான முறையில் மாயமான சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் லீ ஷாங்ஃபு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பற்றிய கேள்விகளுக்கு சீன அரச தரப்பிலிருந்து சரியான விளக்கம் வழங்கப்படாத நிலையில், அவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என ஏற்கெனவே ஊடக தகவல்கள் வெளியாகின.

லீ ஷாங்ஃபு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போது சீன அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கெனவே வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த கின் காங்கும் இதே போல் மர்மமான பின்னணியில் பதவி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

 இன்று ஐ பி எல் போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதவுள்ளன

“அமெரிக்காவில் கொவிட் -19 தொற்றுநோய் முடிந்துவிட்டது” – ஜோ பைடன்

அமெரிக்காவில் ட்ரெண்டிங் ஆகும் ‘சித்தி’