விளையாட்டு

பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில்

(UTV | டோக்கியோ) – 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரையான நிலவரத்தின்படி, பதக்கப்பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது.

5 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் அடங்கலாக மொத்தமாக 9 பதக்கங்களை சீனா வென்றுள்ளது.

இரண்டாம் இடத்திலுள்ள ஜப்பான், 5 தங்கம், ஒரு வெள்ளி அடங்கலாக 6 பதக்கங்களைப் பெற்றுள்ளது.

2 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தமாக 8 பதக்கங்களுடன் அமெரிக்கா 3ஆம் இடத்திலும், 2 தங்கம், 3 வெண்கலம் அடங்கலாக 5 பதக்கங்களுடன் தென்கொரியா 4ஆம் இடத்திலும் உள்ளன.

ரஷ்யா, இத்தாலி, அவுஸ்திரேலியா, துனிசியா, ஒஸ்ட்ரியா, ஈக்குவடோர், ஹங்கேரி, ஈரான், கொசோவோ மற்றும் தாய்லாந்து முதலான நாடுகள் தலா ஒவ்வொரு பதக்கங்களுடன், முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

Related posts

ஓய்வு பெறும் – இலங்கை அணி வீரர்!

ஆசிய கிண்ணத்திற்கான இலங்கை குழாம் அறிவிப்பு

ஐ.பி.எல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்களின் விபரம்!