உள்நாடு

பண பரிவர்த்தனைகள் தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு!

இலங்கை மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தோட்டங்களிலும், அவ்வாறான போலியான இடங்களிலும் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பில் மேலும், மத்திய வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களில் மட்டுமே பண பரிவர்த்தனைகளைப் பெற முடியும்.

சில போலி நிறுவனங்கள் இதுபோன்ற பல்வேறு முறைகளில் வைப்புத்தொகையை ஏற்றுக்கொண்டால், மத்திய வங்கி அல்லது பொலிஸிடம் மக்கள் முறைப்பாடு செய்ய வேண்டும்.

எனவே, மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிறுவனத்திலோ அல்லது பயிர்ச்செய்கை உள்ளிட்ட போலி பண முதலீட்டு திட்டங்களிலோ மக்கள் பணத்தை வைப்பிலிடாமல் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

விளையாட்டு செயலிகள் ஊடாக பணமோசடிகள்!

இலங்கை ரூபாவின் பெறுமதி 200.46 ரூபா வரை வீழ்ச்சி

வெளிநாட்டுப் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக பண மோசடி