உள்நாடு

‘பண அதிகாரம் பாராளுமன்றத்திடம் வழங்கப்பட வேண்டும்’

(UTV | கொழும்பு) – பண அதிகாரம் பாராளுமன்றத்திற்கே வழங்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க, நாடு பொருளாதார சீர்குலைவு மற்றும் அரசியல் குழப்பங்களை எதிர்கொண்டுள்ளது.

இலங்கையின் பணவீக்கம் 30 வீதமாக அதிகரித்துள்ளதாகவும், மேலும் 40 வீதமாக அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு காரணமாக பொதுமக்கள் அனைத்து அம்சங்களிலும் சுமைகளை எதிர்கொள்வதாக முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.

இரண்டு வேளை உணவு கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையின் ஊடாகவே இந்த அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் பிரதமர், அதற்கு பதிலளித்த அரச தலைவர் பதவி விலகப் போவதில்லை என தெரிவித்தார்.

ராஜினாமா செய்யத் தயாராக இல்லை என்றால் புதிய அமைச்சரவையின் கடமைகளை உறுதிப்படுத்தும் அதேவேளை தீர்வுகளைப் பெற்று மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு இருப்பதாக முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற சூழ்நிலையில் போராட்டங்கள் நிறுத்தப்படாவிட்டால், அரச தலைவர் கட்சித் தலைவர்களை அழைத்து அவர்களின் கருத்துக்களைப் பெற வேண்டும் என்று முன்னாள் பிரதமர் கூறினார்.

அடுத்த வாரம் பதவியேற்கவுள்ள புதிய அமைச்சரவையின் ஊடாக இந்த செயற்பாடுகள் இலகுவாக்கப்படும் என முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புக்களை அடக்குவதற்கு முப்படைகளை பயன்படுத்தக் கூடாது எனவும், அரசியலமைப்பை மீறும் வகையில் இராணுவம் ஒருபோதும் செயற்படாது எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.

2018 அரசியலமைப்பு நெருக்கடியின் போது இராணுவத்தின் நடவடிக்கைகள் மூலம் இது தெளிவாக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்ப்புக்களை அடக்குவதற்கு இராணுவத்தை பயன்படுத்தினால், சர்வதேச சமூகங்கள் இலங்கையுடனான தொடர்பை நிறுத்துவதற்கு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று முன்னாள் பிரதமர் கூறினார்.

Related posts

முதலாம் தவணை பரீட்சைகளுக்கு தடை

இலங்கையில் செந்நிற வானம்; காரணம் வெளியானது

பொக்சிங்யில் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் மாணவி மரியம் அனஸ் வெற்றி!