உள்நாடு

பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தக் கோரிக்கை

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.

தேவையான அளவு எரிபொருள் நாட்டிற்கு கிடைப்பதாக அவர் தெரிவித்திருந்த நிலையில் 2 லட்சத்து 65 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை இந்த மாதத்தில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தேவையற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடிநிற்க வேண்டாம் என்று பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் கொள்கலன்களில் எரிபொருள் விநியோகிப்பது பற்றி எதிர்காலத்தில் ஒழுங்கு விதி ஒன்று ஏற்படுத்தப்படும் என்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க மேலும் தெரிவித்தார்.

Related posts

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

இன்றும் லிட்ரோ சமையல் எரிவாயு இல்லை

வாகனங்களின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன் கருவி