உள்நாடு

பண்டாரவளை ஹோட்டல் அறையில் பெண்ணின் சடலம் : தலைமறைவாகிய சந்தேக நபர்

(UTV | கொழும்பு) –

பண்டாரவளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் இருந்து பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

எட்டம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

50 வயதுடைய களனி, கோணவலையைச் சேர்ந்த ஒருவர் குறித்த ஹோட்டலுக்கு வருகைதந்ததுடன் உயிரிழந்த பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்ததாகவும் பின்னர் அந்த நபர் ஹோட்டலில் இருந்து அவசரமாக வெளியேறியுள்ள நிலையில், சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் இருவரும் தங்கியிருந்த அறையினை சோதனையிட்டபோதே குறித்த பெண் சடலமாக காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், நஞ்சும் அருந்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபரால் எழுதப்பட்ட கடிதமொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை பண்டாரவளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரவி உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மனு இன்று பரிசீலனை

இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் இனங்காணப்படவில்லை

ஊடக சுதந்திரத்தை எந்த வகையிலும் தடுக்கவோ, மட்டுப்படுத்தவோ தாம் தயாரில்லை – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

editor