உள்நாடு

பண்டாரகம – அடுளுகமை பகுதி முடக்கம்

(UTV | கொழும்பு) –   கொரோனா தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து பண்டாரகம – அடுளுகமை பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

பண்டாரகம சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட அட்டுலுகம பகுதியின் 8 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அட்டுலுகம பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் அடிப்படையில் 17 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.

இப்பகுதிக்கு எவ்வாறு கொரோனா வந்தது என இதுவரையில் இனங்காணப்படவில்லை என களுத்துறை மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய உதய ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ரஷ்யாவின் Sputnik V செவ்வாயன்று தாயகத்திற்கு

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவருக்கு தொற்று

இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி – திங்கட்கிழமை நாட்டை வந்தடையும்

editor