உலகம்

பணயக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்!

(UTV | கொழும்பு) –

ஹமாஸ் தனது பிடியில் இருந்த அமெரிக்கர்கள் இருவரை கடந்த வாரம் விடுவித்திருந்த நிலையில், நேற்று மேலும் இரண்டு பெண்களை விடுவித்துள்ளது. விடுவிக்கப்பட்ட பெண்கள் இருவரும் வயது முதுமை மற்றும் உடல்நிலை காரணமாக விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், நூரிட் கூப்பர் (79), யோச்சீவ்டு லிஃப்ஷிட்ஸ் (85) இருவரும் பத்திரமாக டெல் அவிவ் நகரை அடைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தனி ஹெலிகொப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு பெண்களும் இஸ்ரேல் இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, இருவரையும் ஹமாஸ் படையினர் பத்திரமாக அழைத்துவரும் காட்சிகளும், இறுதியாக, ஹமாஸ் படையினருக்கு, விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் கைகொடுக்கும் விடியோவும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பலஸ்தீனத்தின் காஸா முனைப் பகுதியில் இருந்து ஹமாஸ் ஆயுதப் படையினர் கடந்த 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இஸ்ரேலியல் 1,400 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் : பலி எண்ணிக்கை 132 தாண்டியது

ஹஜ் கடமையை நிறைவேற்ற வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்க தீர்மானம்

மீண்டும் ஊரடங்கு : வலுக்கும் எதிர்ப்புகள்