அரசியல்உள்நாடு

பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை – விஜித ஹேரத்

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டதாக வெளியான செய்திகள் போலியானவை என அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பணத்தை அச்சிடவோ அல்லது வெளிநாடுகளிலோ அல்லது வேறு நிறுவனங்களிலோ கடன் பெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதிய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்பட்டிருந்தால், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, நிதியமைச்சராக கையொப்பமிட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஜனாதிபதியின் கையொப்பமிடப்பட்ட நாணயத்தாள்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒரு பில்லியன் நாணயத் தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி போலியானதென அவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts

போதைப்பொருள் கடத்தல் : உதவிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் வேட்பாளராக களமிறங்குவாா் -அமைச்சர் பிரசன்ன

பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி கைது!