வகைப்படுத்தப்படாத

பணத்திற்காக தாயின் சடலத்தை கோரிய மகன்!!

(UDHAYAM, COLOMBO) – உயிருடன் இருக்கும் போது நோய் நிலையில் இருந்த தாயிக்கு உதவி செய்யாத மகன், தனது தாய் இறந்த பின்னர் தமது நிறுவனத்தில் இருந்து மரண சடங்குகளுக்காக வழங்கப்படும் கொடுப்பனவை பெற்று கொள்வதற்காக சடலத்தை கோரி சகோதரியிடம் தகராறில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் கல்கமுவ – மஹா அம்போகம பிரதேசத்தை சேர்ந்த 5 பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

தோல் நோயால் அவதிப்பட்டு வந்த அவர் அண்மையில் காலமானார்.

எனினும் தாய் உயிருடன் இருக்கும் போது அவரின் இளைய மகனின் வீட்டில் இருந்துள்ள நிலையில், அவரது நோய் காரணமாக வீட்டில் வைத்திருப்பது சிரமமாக உள்ளதாக கூறி மகனின் மனைவி திட்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் ஒருநாள் படுக்கையிலேயே சிறுநீர், மலம் கழித்ததன் காரணமாக அந்த தாயை மருமகள் வீட்டுக்கு வெளியே இழுத்துச் சென்று போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அந்த தாய் அங்கு வசிக்க முடியாததன் காரணமாக தனது மகளின் வீட்டுக்கு தனியாகவே சென்றுள்ளார்.

அதன்போது அவரின் நிலை கவலைக்கிடமானதால் மகள், தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி பராமரித்து வந்துள்ளார்.

இதேவேளை தாயின் மூத்த மகன் அவருக்கு சில உதவிகளை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய் காலமான பின்னர் அவரை அது வரை கண்டு கொள்ளாத இளைய மகன், தாயின் மரணத்திற்கு பின்னர் சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ள நிலையில், சடலத்தை தனது வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

இதன்போது இதற்கு தாயை பராமரித்து வந்த மகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இருவருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் வாய்த்தகராறு அதிகரித்து மோதலும் இடம்பெற்றுள்ளது.

பின்னர் அங்கிருந்து தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீடு திரும்பிய இளைய மகன் மறுநாள் காலை வந்து தனது தாயின் இறுதிக் கிரியை வேறு பிரதேசத்தில் மேற்கொள்ள இடமளிக்க முடியாது என கூறி சடலத்தை எடுத்துச் செல்ல முற்பட்டுள்ளார்.

நிறுவனத்தினால் வழங்கப்படும் மரணம் தொடர்பான கொடுப்பனவை பெற்று கொள்ளும் நோக்கிலேயே அவர் தாயின் சடலத்தை எடுத்து செல்ல முற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Related posts

Alek Sigley: North Korea releases detained Australian student

அடையாள அட்டை ஒருநாள் சேவையை துரிதப்படுத்த நடவடிக்கை-ஆட்பதிவுத் திணைக்களம்

4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்