உள்நாடு

பணத்தினை கொள்ளையிட்ட மருத்துவரை 48 மணித்தியால தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி

(UTV | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்கு பிரிவில் இருந்து 79 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட மருத்துவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிக நேர கொடுப்பனவு பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தார்.

Related posts

காத்தான்குடியில் மெளலவி ஒருவரின் மனைவி மீது துப்பாக்கிச்சூடு : காரணம் வெளியானது

அரச ஊழியர்களின் சம்பளம் வெள்ளியன்று

சீன நாட்டவருக்கு முன்னுரிமை : இலங்கை அரசு இணங்கியது