உள்நாடு

பட்டமளிப்பு நிகழ்வு குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் அறிக்கை

(UTV | கொழும்பு) – பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறையினரிடையேயும் ஒழுக்கமான நடத்தை மற்றும் அணுகுமுறைகளை நிலைநிறுத்துவதற்கான அதன் உறுதிப்பாட்டை கொழும்பு பல்கலைக்கழகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் உலகளாவிய அளவில் சிறந்த பிரஜைகளை உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கான தவறான புரிதல் தொடர்பில் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற அதன் 2019ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு நிகழ்வை தொடர்ந்து பல்கலைக்கழகம், இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இதன்போது பட்டதாரிகளில் சிலர் தங்கள் பட்டமளிப்பு சுருள்களை அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட வேந்தர் முருத்துத்தொட்டுவே ஆனந்த தேரரிடம் இருந்து ஏற்க மறுத்துவிட்டனர்.

தேரரை, வேந்தர் பதவிக்கு நியமித்தமைக்கு எதிராக சில விரிவுரையாளர்களும் நிகழ்வை புறக்கணித்தனர்.

இதேவேளை இத்தகைய முக்கியமான சந்தர்ப்பத்திற்குத் தேவையான கண்ணியத்தையும் அலங்காரத்தையும் பராமரிக்க உதவிய வேந்தர், பல்கலைக்கழக பணியாளர்கள், இளம் பட்டதாரிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு, பல்கலைக்கழகம் நன்றியை தெரிவித்துள்ளது. .

Related posts

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 24 பேர் வெளியேறினர்

கொழும்பு உட்பட சில இடங்களில் கொரோனா பரவும் சாத்தியம்

புறக்கோட்டை- செட்டியார் தெருவில் கபொஸ் ஒழுங்கையில் அமைதியின்மை [VIDEO]