வணிகம்

பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடன்

(UTV|கொழும்பு) – அரசு அல்லாத உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை மேற்கொள்வதற்காக வட்டி அற்ற கடனை வழங்கும் வேலைத்திட்டம் இம்மாத இறுதியில் ஆரம்பிக்கப்படும் என்று உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர் கல்வி அமைச்சுக்கு உட்பட்டதாக அங்கீகரிக்கப்பட்ட 12 உயர் கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு கற்கை நெறியை தொடர்வதற்காக மாணவர் ஒருவர் 8 இலட்சம் ரூபா வட்டி இல்லாக் கடனை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

2018 ஆம் ஆண்டில் கல்வி பொது தராதர உயர் தர பரீட்சையில் சித்தி எய்திய அரச பல்கலைக்கழகங்களுக்கான வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் முதல் கட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க முடியும்.

Related posts

AG GLASS வடிவமைப்பு உடன் கூடிய மிக நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் முன்னணி EYE AUTOFOCUS அம்சத்துடன் சந்தைக்கு வரவுள்ள VIVO V20

பால்மாவுக்கான வரி அதிகரிப்பு…

பெரிய வெங்காய இறக்குமதியைக் கட்டுப்படுத்த நடவடிக்கை