உள்நாடு

பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்க நடவடிக்கை.

மலையகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகக் கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வரை பெறப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் 1,700 பட்டதாரிகள் மலையகத்தில் உள்ளனர்.

அத்தோடு, தொடர்ந்தும் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளி கொலை!

SLPP நாடாளுமன்ற உறுப்பினர் பலி

மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை நியமிப்பதற்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு