உள்நாடு

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

(UTV|கொழும்பு) – பட்டதாரிகள் மற்றும் அதற்கு நிகரான உயர் தேசிய டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு உறுதியளிக்கப்பட்டவாறு தொழில் வாய்ப்புகளை வழங்க தேவையான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான நிதி ஒதுக்கங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அரசாங்க, பகுதியளவு அரச மற்றும் திணைக்களங்களில் உள்ள வெற்றிடங்களுக்கேற்ப, பட்டப் படிப்பிற்கு பொருத்தமான தொழில் ஒன்றை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

உறுதியளிக்கப்பட்டுள்ளவாறு சுமார் 53 ஆயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நடவடிக்கை மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும்.

பல்வேறு அரச நிறுவனங்களில் தற்காலிக மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபட்டுள்ள 180 நாட்களை பூர்த்தி செய்துள்ளவர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் தொழிலில் நிரந்தரமாக்குதல் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி தகைமைகளை பூர்த்தி செய்துள்ள அனைவரையும் நிரந்தர சேவையில் உள்வாங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

பல்கலைக்கழகங்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் அவற்றில் கல்வி கற்றுவரும் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பாகவும் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் நோக்கமெனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

முல்லைத்தீவில் உறவுகளை நினைவு கூருவதற்கு தடை இல்லை – நீதிமன்றம் தீர்ப்பு

மேல் மாகாணத்திற்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி

22வது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை