உள்நாடு

பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

(UTV | கொழும்பு) – அரசாங்க வேலை வாய்ப்பு திட்டத்தில் நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளின் மேன்முறையீடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றுடன்(15) நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், குறித்த மேன்முறையீடுகளை பரிசீலிக்கும் நடவடிக்கை இன்று (16) முதல் ஆரம்பிக்கப்படுவதாக அரச ​சேவை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேன்முறையீடுகளை ஆராயும் நடவடிக்கையை இரண்டு வாரங்களில் நிறைவு செய்ய உத்தேசித்துள்ளதாக அமைச்சின் செயலாளர் J.J. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.

அரச சேவையின் பதவி வெற்றிடங்களுக்கு உள்வாங்கப்படவுள்ள பயிலுனர் பட்டதாரிகள் 50,000 பேருக்கு பயிற்சியளிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மேன்முறையீடுகளை ஆராய்ந்ததன் பின்னர் மேலும் 10,000 அரச சேவை பதவிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தி மாத்திரமே இப்போதும் மக்களுக்கு இருக்கும் ஒரே தீர்வு – சஜித்

editor

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 339 பேர் கைது

இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது