சூடான செய்திகள் 1

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உலக உணவு விவசாய அமைப்பின் உதவி

(UTV|COLOMBO)-சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும் உரிய தரப்புக்களுக்கு உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.

சேனா படைப்புழு தொடர்பான நிலை குறித்து ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் விவசாய அமைப்பு தொடர்ந்தும் கண்காணித்து வருகின்ற தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேனாப் படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஆபிரிக்காவில் பயன்படுத்தப்பட்ட கிருமிநாசினி முகாமைத்துவ மூலோபாய முறைமை விவசாய அமைச்சிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது எனவும் ஐக்கிய நாடுகள் சபை உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

 

 

Related posts

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது…

கண்டியில் ஊரடங்குச் சட்டம் காலை 10 மணிக்கு நீக்கப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு அமுல்

2020 ஆம் ஆண்டுக்கான விடுமுறை தினங்கள் அறிவிப்பு