சூடான செய்திகள் 1

பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை மார்ச் மாதம் 28ம் திகதி மீண்டும் விசாரிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தம்மிக கனெபொல முன்னிலையில் இன்று (16) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி அலிசப்ரி, இந்த வழக்குடன் தொடர்புடைய ஆவணங்கள் சில இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்று நீதிமன்றில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் பிரதிவாதி தரப்பால் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை பரிசோதனை செய்து அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரச பிரதி சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றில் கூறினார்.

அந்த நடவடிக்கையின் முன்னேற்ற நிலமை குறித்து அறிவிக்க திகதி வழங்குமாறும் அவர் நீதிமன்றில் ​கேட்டுக் கொண்டார்.

அதன்படி வழக்கை மார்ச் மாதம் 28ம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் முன்னேற்றம் குறித்து தெரிவிக்குமாறும் உத்தரவிட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவிநெகும திணைக்கள நிதியை மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பதுளை மாவட்டத்தில் 29,000 குடும்பங்கள் மண்சரிவு எச்சரிக்கைக்கு

வெப்பத்துடனான வானிலை – மக்களுக்கு எச்சரிக்கை…

சபாநாயகர் நியாயமாகவும் தைரியமாகவும் செயற்படுகின்றார் – ரிசாட் பதியுதீன்