உள்நாடு

பசில் – ஆட்டிகல நாட்டிலிருந்து வெளியேறுகின்றனர்

(UTV | கொழும்பு) – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் திறைசேரி செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோர் இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று (25) இந்த விஜயத்தை இருவரும் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், அதற்கு இந்தியாவின் ஆதரவு குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளது.

ஒரு நாடாக இலங்கை தற்போது பல கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது, எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடிகளை தீர்க்க நாட்டிற்குள் டொலர்களின் வரவை மீண்டும் செயற்படுத்துவதே இவற்றின் பிரதான சவால்களாகும்.

வளரும் நடுத்தர வருமான நாடாக இலங்கை எதிர்கொள்ளும் மிகப்பெரிய பொருளாதார சவாலாகவும் இது உள்ளது.

பரந்துபட்ட இராஜதந்திர உறவுகளின் மூலம் நாட்டை பாதாளத்தில் இருந்து மீட்பது குறித்து ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்காக தற்போதைய அரசாங்கம் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது நட்பு நாடுகளுடன் வெளிநாட்டு உறவுகளில் ஈடுபடுவதை அரசாங்க நிபுணர்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts

கலந்துரையாடல் தோல்வி : தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையிலிருந்து மீள, அரசியல் தீர்வுகள் பயனற்றவை – பந்துல குணவர்தன.

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைப்பு