உள்நாடு

 பசறை மாணவர்களுக்கு விடுமுறை – பலத்த காற்றினால் பெரிதும் பாதிப்பு

(UTV |  பசறை) –  பசறை மாணவர்களுக்கு விடுமுறை – பலத்த காற்றினால் பெரிதும் பாதிப்பு

பதுளை மாவட்டத்தின் பசறை, லுனுகலை, மடுல்சீமை, நமுனுகுல உட்பட பல பகுதிகளில் நேற்று(07) பிற்பகல் பொழுதிலிருந்து வீசிய கடும் காற்று காரணமாக மக்கள் குடியிருப்புகள், பாடசாலைகள், பொது கட்டடங்கள் என பலவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாரிய மரங்கள் வீதிகளிலும் வீடுகளிலும் சரிந்து விழுந்துள்ளன.

இந்நிலையில், தொடர்ந்தும் காற்று வீசுவதால் மேலும் சேதம் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது. லுனுகலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஹொப்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் தோட்டத் தொழிலாளர் குடியிருப்புகள், பாடசாலைகள் என்பன பகுதியளவிலும் முழுமையாகவும் சேதமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக நேரடியாக ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதயகுமார தெரிவித்துள்ளார்.

இதேவேளை பசறை கல்வி வலயத்தில் அனர்த்த அபாயமுள்ள பாடசாலைகளுக்கு இன்று (08) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்கி, பாடசாலை மாணவர்களை பாதுகாப்பான முறையில் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு ஊவா மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டபிள்யூ. ரந்தெனிய, பசறை வலயக் கல்வி காரியாலயத்தின் பணிப்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

துருக்கி நாட்டின் புதிய தூதுவர் இராணுவ தளபதியுடன் சந்திப்பு [PHOTOS]

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் குறைவு – வெரிட்டே ரிசர்ச்சின் ஆய்வில் தகவல் .

லஞ்ச் ஷீட்கள் மற்றும் பொலிதீன் பைகளது விலைகளும் உயர்வு