(UTV | கொழும்பு) – கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று(14) இரண்டாவது நாளாகவும் வளர்ச்சியுடன் நிறைவடைந்தது.
3.6 பில்லியன் ரூபாய்க்கு பரிவர்த்தனை இடம்பெற்றுள்ள நிலையில் இதில் கொமர்ஷல் வங்கியின் 2.93 பில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகள் பரிவர்த்தனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாள் முடிவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 4,393.54 ஆக பதிவாகிய நிலையில் அது முன்னைய தினத்துடன் ஒப்பிடுகையில் 26.29 புள்ளி என்ற 0.60 சதவீத வளர்ச்சியாகும்.